ரவி கருணாநாயக்க தேசியப்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டதால் கட்சிக்குள் முறுகல்!

0 549
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் கட்சிக்குள் முறுகல் ஏற்பட்டுள்ளது.

அவருக்குத் தேசியப் பட்டியல் வழங்கப்பட்டமைக்கு பல பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பின்னணியில் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷாமிளா பெரேரா, சட்டத்துக்குப் புறம்பாகத் தேசியப் பட்டியல் உறுப்பினர் தெரிவு இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமை தொடர்பாகச் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நால்வர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வாரங்களுக்குள் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து அதன் அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Reply

Your email address will not be published.