வீடுகளில் சிகப்பு மஞ்சல் கொடிகளை ஏற்றி மாவீரர்களை நினைவு கூறுகள் – தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் வேண்டுகோள்
மாவீரர்களின் தியாகங்கள் மனதிலே குடியிருப்பதனை தமிழர்கள் அனைவரும் இல்லங்களின் வாயில்களில் சிகப்பு மஞ்சல் கொடியேற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டாளரும்,தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமான வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்..
மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடக சந்திப்பு இன்று புதன் கிழமை(25) காலை மன்னாரில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.
அத்துடன் மேலும் கருத்து தெரிவித்த வி.எஸ்.சிவகரன்,
மாவீரர்களின் தியாகங்கள் மனதிலே குடியிருப்பதனை உங்கள் இல்லங்களின் வாயில்களில் சிகப்பு மஞ்சல் கொடியேற்றி வான வெடிகளை கொளுத்தி தீப்பிழம்பாக வானம் முழுவதும் சிவப்பு ஒளி வட்டம் தோன்றக் கூடிய வகையிலே அந்த காட்சியை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இதனூடாக மாவீரர் துயிலுமில்லங்களை நினைத்து அந்த கனவு நாயகர்களினுடைய நினைவுகளை நினைவேந்துங்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாங்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கு படுத்தி விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களது உறவுகள் தங்களுடைய ஆத்மார்த்தமான கண்ணீரை செலுத்துவதற்கான ஏற்ப்பாடுகளை கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு விதமான மிரட்டல்கள், விசாரணைகள் போன்றவற்றை எல்லாம் கடந்து அதை நிறைவேற்றி இருந்தோம்.
ஆனால் இந்த முறை சட்டம் எங்களை விலங்கிட்டு தடுத்துள்ளது.
அந்த இடத்துக்குள் நகர முடியாத வகையிலும், இந்த விடயங்களை அனுஸ்டிப்பதில் இருக்கின்ற மிகப் பெரிய சவாலுக்கு உட்படுத்தப்படு இருக்கின்றது வடக்கு கிழக்கு.
ஒரு விடுதலை என்ற நோக்கோடு நாள் குறித்து நேரம் குறித்து நிமிடம் குறித்து தன்னுடைய இன்னுயிரை இந்த மண்ணின் விடுதலைக்காக ஈகம் செய்த அந்த பெருந்தகைகள் வரலாறுகளில் பதிந்து விட்ட அவர்களுடைய செயல்களும், எண்ணங்களும் யாருடைய மனங்களில் இருந்தும் மாற்றி விடவும் எடுத்து விடவும் நீக்கிவிடவும் முடியாத
அளவில் இருக்கும் அந்த மாவீரர்களின் தியாகங்களை நினைத்து பார்க்க முடியாத அல்லது நினைத்துப் பார்க்கக்கூடிய அளவுக்கு அவர்களுடைய தியாகங்கள் மிகப்பெருமானம் உடையவை.
காலங்கள் எத்தனை ஆனாலும் கூட அந்த தியாகங்களை யாரும் மறந்து விடவும் நீக்கி விடவும் மனங்களிலிருந்து அழித்துவிடவும் முடியாது.
அரசு இவ்வாறான மிக மோசமான காரியத்தைச் செய்தாலும் கூட தமிழ் மக்களுடைய மனங்களில் இருந்து மாவீரர்களின் தியாகங்களை நீக்கி விடவும் அழித்து விடவும் முடியாது எனவும் அவர் குறிப்பிடடார்.
ஆகவே இந்த ஆண்டு தடை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதே தவிர மாவீரர்களை அனுஸ்டிக்க வேண்டும் அந்த அனுஸ்ரிப்பதற்குறிய நிலைப்பாட்டில் இருந்து பெரும் எடுப்பிலான உணர்வு பூர்வமான என்னப் பிரதி பலிப்புகள் தமிழர்களுடைய தரப்பிலிருந்து மேல் எழுச்சி பெற்று இருக்கிறது.
ஆகவே அரசு இதனை புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு உணர்வு ரீதியான பிரச்சினையில் அரசு எங்களோடு விளையாடுகிறது.
பௌத்த தேசியவாதத்தை சந்தோசப் படுத்துவதற்காக அல்லது பௌத்த தேசியவாதத்தை திருப்திப்படுத்துகின்ற அரசியல் நிகழ்ச்சி நிழலுக்காகவும் எங்களுடைய உணர்வுபூர்வமான விடயத்தில் விளையாடுகின்றது.
இந்த வீரர்களின் உறவுகளினுடைய சாபங்கள் இந்த அரசை சும்மா விட்டு வைக்க போவதில்லை என்பதனையும் கூறிக்கொண்டு , எங்களது உள்ளங்களில் இருக்கின்ற எண்ணங்களின் பிரதிபலிப்பை நாங்கள் இல்லங்களில் காட்ட வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.
ஏனெனில் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு உட்பட்ட அரசு வழக்குத் தாக்கல் செய்தால் இந்த வழக்கில் இருந்து விடுபடக் கூடிய ஏதுவான நிலை என்பது மிக இலகுவாக இல்லை.
மிகவும் வலிமையான சட்ட கோட்பாடுகள் காணப்படுவதனால் நாங்கள் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவையும் எமக்கு உள்ளது.
நாங்கள் அரசுக்கு பயந்து விடவும் அஞ்சி விடவும், அல்லது அரசினுடைய இந்த தடைகளை கண்டு அரசினுடைய மிரட்டல்களை கண்டு நாங்கள் அஞ்சி விட மாட்டோம்.
உங்கள் வீடுகளின் வாயில்களில் நீங்கள் மஞ்சள் சிவப்பு கொடியேற்றி, தீபமேற்றுங்கள்.
அந்த நேரத்திலேயே எங்களுடைய எழுச்சியையும், தன்மானத்தினுடைய இருப்பையும் , தாயக விடியளினுடைய நோக்கையும் எமது உறவுகளின் ஆத்மார்த்த எண்ணங்களுக்கு மாறாக நாங்கள் ஒரு எழுச்சி மிகு செயலை காட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
உங்களால் முடிந்தால் மாவீரர் நாளுக்கு முரணான காரியமாக இருந்தாலும் கூட இந்த அரசுக்கு நாங்கள் எதிர்ப்பு காட்ட வேண்டும்.
அரசுக்கு இந்த உணர்வு ரீதியான நிலையிலிருந்து எங்களோடு விளையாடக் கூடாது.
விளையாடினால் தமிழ் மக்கள் இவ்வாறாக கிளர்ந்து எழுவார்கள் , பொங்கி எழுவார்கள் அவர்களுடைய எண்ணங்கள் எவ்வாறு பிரதி பலிக்கும் என்பதனை இந்த அரசு 27 ஆம் திகதி புறிந்து கொள்ள வேண்டும்.
எந்த தடைகள் வந்தாலும் என்ன எந்த நிலைப்பாடுகள் வந்தால் என்ன நினைவு கூறுவதில் இருந்து தமிழ் மக்கள் ஒருபோதும் பின் வாங்கி விட முடியாது. பின் வாங்கவும் மாட்டார்கள்.
இவ்வாறான சூழ் நிலைக்கு ஏற்ற மாதிரி எங்களுடைய மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கு அரசு தடை விதிக்க முடியாது. கைது செய்யவும் முடியாது. எந்த காரியமும் செய்ய முடியாது. உங்கள் உள்ளங்களில் இருக்கின்ற எண்ணங்களை இல்லங்களில் காட்டுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
இதேவேளை சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் கருத்து தெரிவிக்கையில்,,,,,,
நமது மாவீரர் நினைவு தொடர்பாக எல்லா இடங்களிலும் நீதிமன்றமானது அதை நினைவு கூர்வதற்கு தடை விதித்துள்ளமை அனைவரும் அறிந்த விடயம்.
இது சம்பந்தமாக மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்திற்கு அமைவாக இந்த நீதி மன்றத்தினால் நினைவு கூற தடைவிதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான எமது சட்டத்தரணிகள் எமது சார்பாக ஒரு நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து தடைக்கு எதிராக எமது ஆட்சேபனையை நாங்கள் தெளிவாக கூறியிருந்தோம்.
ஆனாலும் அதனை தொடர்ந்தும் இந்த நீதிமன்றமானது இந்த தடை உத்தரவை நீடித்துள்ளது.
இந்த நிலையிலேயே இந்த நீதிமன்றத்தின் கட்டளையை நாங்கள் மதிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
அதே நேரத்தில் எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களையும் நாங்க மதிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
எனவே சட்ட ரீதியாக இந்த நீதிமன்ற தடையானது எமது உறவுகளின் நினைவு நிகழ்வினை பொது இடத்தில் மக்களை ஒன்று கூடி செய்வதற்குத்தான் தடை விதித்துள்ளனர்.
ஆகவே உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து உணர்வு பூர்வமான நினைவேந்தலை நினைவு கூறுவதற்கு சட்ட ரீதியாக எந்தவித தடையும் இல்லை.
எனவே எதிர் வரும் 27 ஆம் திகதி நாங்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக எமது இடங்களிலே இருந்தவாறு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி எமது நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..