தெற்காசிய கிண்ண ‘சவாட் கிக் பொக்சிங்’ போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு!!
ஓஸ்ரியா’ நாட்டில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய கிண்ண சவாட் கிக் பொக்சிங் போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சவாட் கிக் பொக்சிங் சங்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண சவாட் கிக் பொக்சிங் தலைமை பயிற்றுவிப்பாளருமான M.S.நந்தகுமார் தலைமையில் பயிற்சி பெற்ற 12 வீரர்கள் வடக்கிலிருந்து ஒஸ்ரியா நாட்டில் நடைபெறவுள்ள ‘தெற்காசிய சவாட் கிக் பொக்சிங்’ போட்டிக்கு பயணமாகவுள்ளனர்.
தெற்காசிய சவாட் கிக்பொக்சிங் அமைப்பின் பணிப்பாளரும், பயிற்றுவிப்பாளரும், இலங்கை சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவருமான சீ.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையை பிரதிபலித்து சவாட் கிக்பொக்சிங் வீரர்கள் ஒஸ்ரியா நாட்டைநோக்கி பயணமாகவுள்ளனர்.
பாக்ஸ்தானில் கடந்த 2020 ஜனவரி நடைபெற்ற சர்வதேச சவாட் கிக்பொக்சிங் (திறந்த) போட்டிகளில் இலங்கையை பிரதிபலித்து கலந்து கொண்ட வடக்கை சேர்ந்த வீரர்களான S.ஸ்ரீதர்சன், K.நிரோஜன், B,ராகுல், V.வசிகரன், S.சஞ்சயன், T.நாகராஜா, R.K.கெவின் ஆகியோர் கலந்து கொண்டு இலங்கைக்கு ஏழு பதக்கங்களை பெற்றுக் கொடுத்த நிலையில்
2021 ஒஸ்ரியா நாட்டில் நடைபெறவுள்ள தெற்காசிய சவாட் கிக் பொக்சிங் போட்டிகளில் பங்குகொள்ள இவ்வீரர்களுடன் மேலும் வடக்கிலிருந்து ஐந்து வீர, வீராங்கனைகள் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச போட்டியின் மூலமாக தெரிவு செய்யப்பட்டு, (M.பிரவீந்த், M.கிஷாளினி , C.விதுஷா M.கிருபாலினி, W.இமேஷா ஆகிய வீர, வீராங்கனைகள்) ஒஸ்ரியா நாட்டில் நடைபெறவுள்ள சவாட் கிக் பொக்சிங் தெற்காசிய கிண்ணத்திற்கான போட்டிக்கு செல்ல உள்ளனர்.
இப்போட்டிக்கு நான்கு பெண் வீராங்கனைகள் பங்குற்ற உள்ளனர் இதில் வவுனியா மாட்டத்தை சேர்ந்த ஒரு சகோதர மொழியைச் சேர்ந்த வீரங்கனையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்திலிருந்து 03 வீராங்கனைகளும்., 09 வீரர்களும் பங்கு பற்ற உள்ளனர்
இப் போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சவாட் கிக்பொக்சிங் அமைப்பின் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில்….
இலங்கையில் ‘சவாட் கிக் பொக்சிங்’ அமைப்பின் தலைவர் சீ.பூ.பிரசாத் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் இயங்கி வருகின்றது. வடக்கின் ‘சவாட் கிக் பொக்சிங்’ பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் M.S.நத்தகுமாராகிய நான் வடக்கிலுள்ள திறமையான வீர, வீராங்கனைகளை இனங்கண்டு அவர்களை பயிற்றிவித்து சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகின்றேன்.
அதிலும் வடமாகாணத்திலுள்ள எங்கள் தமிழ் இளைஞ., யுவதிகளுக்கு தற்க்காப்புக்கலை விளையாட்டுக்களின் ஊடாக சர்வதேச ரீதியிலான பல சாதனைகளை அடையச்செய்து சிறந்த எதிர்காலத்தை ஏற்ப்படுத்தி கொடுப்பதோடு, வடக்கில் சீரான ஒழுக்கமுடைய இளைஞர் சமுதாயத்தினை உருவாக்க துனைபுரிவோம் என்றும் இப்போட்டிக்கு செல்லும் வீர,வீராங்கனைகள் இப் போட்டிக்கு செல்வதற்கான அனைத்துவிதமான ஒத்துளைப்பினையும், அனுசரனையினையும் பெற்று தருவதற்கு வழிவகுக்குமாறும் கூறினார்.
அந்தவகையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஒஸ்ரியா நாட்டில் நடைபெறவுள்ள ‘சவாட் கிக் பொக்சிங்’ போட்டிகளுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும் வீர, வீராங்கனைகளை தகுந்த அனுமதியுடனும், சுகாதார பாதுகாப்பின் பிரகாரமும் தகுந்த முறையில் தயார்படுத்தி வருகின்றேன். வடக்கிலிருந்து எனது தலைமையில் 12 வீர,வீராங்கனைகள் ‘தெற்காசிய சவாட் கிக் பொக்சிங்’ போட்டிகளில் கலந்து கொள்ள பயணமாகவுள்ளனர் என தெரிவித்தார்.