நெடுந்தீவில் புரவி புயல் பாதிப்புகளை நேரடியாக சென்று ஆராய்ந்தார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.
யாழ்.மாவட்டத்தில் புரேவி புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவுபகுதியை அரசாங்க அதிபர் மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு வருகின்றார்கள்.
இன்றைய தினம் (04) நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிற்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி மற்றும் நெடுந்தீவு பிரதேச உத்தியோகத்தர்கள் ஆகியோர் களவிஜயம் செய்து புரேவிப் புயலால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக நெடுந்தீவு பிரதேச மக்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேச பொது அமைப்புகளுடன் கலந்துரையாடினார்.
இக் களவிஜயத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களது பிரச்சனைகள், நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களது போக்குவரத்து பிரச்சனைகள், துறைமுகத்தை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் கடலரிப்பு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்