கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதலாவது தமிழ் பெண்..
இன்றய சூழலில் உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் பல லட்சக் கணக்கான உயிர்களை காவுகொண்ட ஒரு நோயாக கொரோனா தொற்றுநோய் காணப்படுகின்றது.
இந்த நோய் பரவ ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகளும் பல முயற்சிகளை முன்னெடுத்து தோல்வியும் கொண்டிருந்தன.
இந்த நிலையில் கொரோன தொற்று நோய்க்கான தடுப்பூசியை பிரிட்டன் அரசு கடந்த வாரம் அறிமுகப்படுத்தியதில் இருந்த்து பலரும் அந்த தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே முதல் முதலாக பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரும் கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 47 வயதுடைய லீனா அனீஸ் என்பவரே இவ்வாறு தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார்..
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆஸ்ட்ராசெனீகா என்ற நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.