இலங்கை கடற்படையை கண்டித்து இந்திய மீனவர்கள் தொடர் போராட்டத்தில் குதிப்பு.

0 38

இலங்கை கடற்படையினரை கண்டித்து தொடர் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்: மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்.

இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு விசைப்படகு மீனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கண்டண ஆர்பாட்டம் ஒன்றாயும் முன்னெடுக்கவுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்..

இதனால் 600 க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லாமல் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரையும் இலங்கை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி மீனவர்கள் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்.

இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் திங்கட்கிழமை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் 600 விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 15 ஆயிரம் மீனவர்களும் 20 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.