நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

0 22

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் சமூகத்திற்கு வரும் போது சுகாதார ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமூகத்திற்கு வருவதென்றால் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேடமாக நாள்பட்ட நோயுடைய நபர்கள், வயோதிபர்கள் வீட்டிலேயே தங்கியிருப்பது அவசியமாகும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளளார்.

ஒரு மீற்றர் தூர இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல், முகக் கவசம் அணிதல் போன்றவைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்து பயன்பாட்டின் போதும் வர்த்தக நிலையங்கள் மற்றும் கடமை இடங்களுக்கு செல்லும் போது சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுவது அத்தியாவசியமாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.