இலங்கையில் முதல் முறையாக வைத்தியர் ஒருவரை காவு வாங்கிய கொரோனா.
ராகம வைத்தியசாலையில் சேவையாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
32 வயதுடைய கஜன் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியகியுள்ளது.
கொரோன தொற்றுக்கு உள்ளான குறித்த வைத்தியர் காலி கராபிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்..
இந்த நிலையிலேயே ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அரச மருத்துவ அதிகார சங்கத்தின் மருத்துவர் ஹரிதா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.