வடக்கில் இன்றுடன் நிறைவடைகிறது கோவிட் – 19 தடுப்பூசி நடவடிக்கைகள்.
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் நான்காவது நாளான நேற்று 704 பேருக்கு தடுப்பூசி போடடப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த நான்கு நாள்களில் வடக்கு மாகாணத்தில் 7 ஆயிரத்து 925 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இது மொத்த உத்தியோகத்தர்கள் எண்ணிக்கையில் 80 சதவீதமாகும் என தெரிவித்த மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர்.
இந்தப் பணியில் முதல் நாளில் 2 ஆயிரத்து 997 பேர் கோவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இது 30 சதவீதத்தினர் ஆகும்.
இரண்டாவது நாளில் ஆயிரத்து 530 பேரும் மூன்றாவது நாள் 2 ஆயிரத்து 694 பேரும் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் நான்காவது நாளான நேற்று 704 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி இதுவரை 80 சதவீத சேவையாளர்கள் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பவதிகள் மற்றும் கர்ப்பம் தரிக்க காத்திருப்போர் என மூன்று வகையினரை இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதனால் அவ்வாறானவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள இன்றய தினம் மேலும் ஒருநாள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது;