இன அழிப்பை பகிரங்க படுத்திய நவநீதம்பிள்ளை – இலங்கைக்கு எச்சரிக்கை..

0 285

இலங்கையில் தமிழ்மக்கள் மீது கடுமையான விமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை தாம் பார்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்ப்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் காணொளிகள் வெளியாகியுள்ளன.

தமிழ் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள், மருத்துவமனைகள், கோவில்கள்,மற்றும் அடைக்கலம் கோரிய இடங்கள் அத்தனையும் அளிக்கப்பட்டன.

பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது.

அது மாத்திரமின்றி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இதன்போது மருத்துவமனைகளில் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை செவிமடுத்திருக்கின்றோம்.

அது மாத்திரமின்றி பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வெள்ளை கொடிகளை காட்டிய போதும் இலங்கை இராணுவம் அவர்களை கொன்றதை பார்த்திருக்கின்றோம்.

எனவே பொறுப்புக்கூறலுக்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.