பாரஊர்தி சாரதியை றெஸ்லிங் பாணியில் தாக்கிய போக்குவரத்து பொலிஸார் கைது.. (கானொளி)

0 337

மஹரகம – ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய பகுதியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி பன்னிப்பிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சாரதியை நடு வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கிய குறித்த பொலிஸ் அதிகாரி நேற்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பாரவூர்தி சாரதியை குறித்த பொலிஸ் அதிகாரி கடுமையாக தாக்கும் கானொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை இந்த சம்பவத்தினை கண்டித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய மகன் யோசித ராஜபக்ஸ டுவிட்டன் பதிவொன்றினை இட்டுள்ளார்.

குறித்த பதிவில் வீதியில் ஒரு பொலிஸ் அதிகாரி இரக்கமின்றி ஒருவரை அடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

சீருடை அணிந்த ஆண்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பாகவும் காவல்காரர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.