வடக்கில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று..

0 233

வவடக்கில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று..ட மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 27 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருமே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 320 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டது.

அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் 755 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்;படுத்தப்பட்டன.

குறித்த பரிசோதனை முடிவுகளின்படி 22 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.