மாமனிதர் இராயப்பு யோசேப் ஆண்டகை..

0 452

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நெடுந்தீவில் பிறந்தவர் வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை.

தனது ஆரம்பக் கல்வியை நெடந்தீவு மற்றும் முருங்கன் கத்தோலிக்க பாடசாலைகளிலும்; நிறைவு செய்துகொண்ட இவர் உயர்கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் பயின்றார்.

பின்னர் யாழ்ப்பாணம் தேசிய குருத்துவக் கல்லூரியில் இணைந்து துறவறக் கல்வியைத் தொடர்ந்தார்.

அதன்படி 1967 ஆம் ஆண்டு 27வது வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு தனது பணியை ஆர்பித்தார்.

1971 ஆண்டு முருங்கன் பங்கின் உதவி பங்குத் தந்தையாக பொறுப்பேற்ற இராயப்பு ஜோசேப் உர்பானியானா பல்கலைக்கழகத்தில் திருச்சபைச் சட்டத்தில் முனைவர் பட்டத்தை பெற்றார்.

தனது கல்வியை அத்தொடு நிறுத்திக்கொள்ளாத அவர் 1984 ஆம் ஆண்டில் ரோமில் உள்ள பரப்புரைக் கல்லூரியில் திருமறைச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பின்னர் 1992 ஆண்டு யூலை மாதம் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 1992 அக்டோபர் மாதம் மறைமாவட்டத்தின் 2வது ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

துறவற பணிக்கென தம்மை அரப்பணித்தக்கொண்ட இராயப்பு ஜோசேப் ஆண்டகை அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழின பற்றாளர்களாகவும் வலம்வந்தார்.

குறிப்பாக ஈழ வரலாற்றில் தமிழீழ விடுலை போராட்டத்துக்கு மிகவும் உந்துசக்தியாக செயற்பட்டதுடன் மேதகு.வே. பிரபாகரன் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட போற்றப்பட்ட ஒருவராக அடிகளார் காணப்பட்டார்.

சில சமயங்களில் விடதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளுக்கு நேடியாக கட்டளை பிறப்பிக்கும் அளவுக்கு விடுதலை போராட்டத்தக்கு துணையாக இருந்தவர் என்றும் கூறலாம்.

அது மாத்திரமின்றி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல அச்சுறுத்தல்களையும் தாண்டி ஈழப்போரின் போது இலங்கையில் நடைபெற்றது, இனப்படுகலை எனவும் சுமார் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் எனறும் ஐ.நா வரை எடுத்தரைத்தவர்.

இவ்வாறு கிறிஸ்தவ துறவியாகவும் தமிழின காவலனாகவும் பரிமாணம் எடுத்த இராயப்பு ஜோசேப் ஆண்டகை 2015 நடுப்பகுதியில் சுகவீனமுற்று தனது ஆயர் பதவியைத் துறந்தார்.

இவரது பதவித் துறப்பை திருச்சபை சட்ட எண் 401 பகுதி 1க்கு அமைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016 ஆண்டு ஜனவரி மாமதம் 14 அம் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்; தமிழினத்தின் மனித உரிமைக்காக போராடிய மாமனிதர் இராயப்பு யோசப் ஆண்டகை ஐ.நா வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தியை கேட்டபடியே இன்று 01.04.2021 அன்று மண்ணை விட்ட நித்திய வாழ்வுக்குள் தம்மை அர்பணித்தக்கொண்டார்.

அடிகளாரின் ஆத்ம சாந்திக்காகாக இறைவனை பிராத்தித்துக்கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.