பறக்கும் கார்கள் விரைவில் அறிமுகம் – உலகமே மாறப் போகிறதா?

0 794

பறக்கும் கார்கள் எதிர்காலத்துக்கானவை ஆக தோன்றலாம். ஆனால், வணிக ரீதியிலான ஜெட் வாகனங்கள் முதல் தனிப்பட்ட ஏர்டாக்சி வரையில், எல்லாம் ஏற்கெனவே வந்து விட்டன. நாம் பயணிப்பது, வேலை செய்வது மற்றும் வாழ்வதில் அவை எந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இங்கே பார்க்கலாம்.

2019ல் லாஸ் ஏஞ்சலஸ் கற்பனையில் எப்படியிருக்கும் என்ற நிஜமான பிளேடு ரன்னர்ஸ் உருவான போது, “ஸ்கிம்மர்கள்” நிறைந்த விண்ணில் இருந்து அமில மழை பெய்யும் நகராக இருந்தது. விண்ணில் நெடுஞ்சாலையில் பறக்கும் கார்கள் பயணம் அதிகமாக இருந்தது.

1982ல் அந்தப் படம் வந்ததில் இருந்து, ஹாலிவுட் உலகமே ஊகித்திராத அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. செல்பி ஸ்டிக்குகள், கொலை செய்யும் டிரோன்கள், ஹேஷ்டேக் அரசியல் என மாறிவிட்டது. ஆனாலும் தலைக்கு மேலே செல்லும் கார்கள் என்பது இன்னும் கற்பனையாகவே இருந்து வருகிறது. அறிவியல் கற்பனை நாவல்கள் மற்றும் தீம் பார்க் பயணங்களில் மட்டுமே அது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உண்மையில், பறக்கும் கார்கள் இருக்கின்றன – அவை நமது பயணம், வேலை மற்றும் வாழ்வை வரக் கூடிய காலங்களில் மாற்றுவதாக இருக்கப் போகின்றன.

பேட்டரி சக்தியின் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தனிப்பட்ட பறக்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சிகளை மெட்டீரியல் அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் சிமுலேசன் ஆகியவை விரைவுபடுத்தியுள்ளன.

இவற்றை தனித்து இயக்கும் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. மின்சார கிளைடர்கள் முதல், இறக்கை பொருத்திய வடிவமைப்பு மற்றும் 4 விசிறிகள் கொண்ட குவாட்காப்டர் டிரோன்கள் வரை தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இப்போதைக்கு நகர்ப்புற தன்னாட்சி விமான சந்தையானது ஒழுங்குமுறைகள் இல்லாமல் உள்ளது.வணிக ரீதியில் ஜெட் வாகனங்கள், பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தனிப்பட்ட ஏர் டாக்சிகளை உருவாக்குவதில் டஜன் கணக்கிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

வேகமாக வளர்ந்து வரும் இத் துறையில் விமான தயாரிப்பு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், ஊபர் போன்ற வாடகை வாகன நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இத்துறையில் 2040 ஆம் ஆண்டு வாக்கில் 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு புழக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில், இந்தப் புதிய போக்குவரத்து சூழலை நிர்வகிக்கும் நோக்கில் விமான போக்குவரத்துத் துறை புதிய கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை அறிவித்துள்ளது.

 

ஜெர்மனியைச் சேர்ந்த வோலோகாப்டர் நிறுவனம், முதன்முதலில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற மின்சார ஏர் டாக்சியை விற்பனைக்குக் கொண்டு வந்தது. அது பைலட் இல்லாமல் இயங்கும் வாகனமாக இருந்தது.

“அது ஊபர் பிளாக் போன்றதாக அல்லது வேறு எந்த ப்ரீமியம் சர்வீஸ் போன்றதாக இருக்கும்” என்று வோலோகாப்டர் நிறுவனத்தில் மக்கள் விவகாரங்கள் பிரிவு துணைத் தலைவர் பேபியன் நெஸ்ட்மன் தெரிவித்தார்.

சில மாற்றங்கள் இருந்தாலும், அவர் சொன்னது போலவே அது இருந்தது. ஆரம்பத்தில் வோலோசிட்டி என்ற அந்த வாகனத்தில் ஒரு பயணிக்கு மட்டுமே இருக்கை இருந்தது. அதனால், ஆரம்பத்தில் பயணத்துக்கான செலவு அதிகமாக இருந்தது. ஆனால் முழுமையாக தானாக இயங்கக் கூடிய, மின்சாரத்தில் இயங்குவதாக, இறக்கைகள் அல்லாமல் 9 பேட்டரிகள் மூலம் இயங்குவதாக, வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் பயணிகளை அழைத்துச் செல்லக் கூடிய வகையில் வாகனங்களை வடிவமைப்பு மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம் என்று வோலோகாப்டர் நிறுவனம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

பெரிய நகரங்களில், இந்த வாகனங்கள் செங்குத்தாக கிளம்பிச் செல்லவும், செங்குத்தாக இறங்கவும் விமான தளங்கள் அமைக்கப்படும். வோலோசிட்டியின் வணிக ரீதியிலான முதலாவது வான்வழி பயணம் 2022-ல் தொடங்கும் என திட்டமிடப் பட்டுள்ளது.

அப்போது முதலாவது பயணத்துக்கு ஒரு டிக்கெட்டுக்கு 350 டாலர் வரை செலவாகும். ஆனால், அந்தச் செலவைக் குறைக்க வேண்டும் என்பது தான் நிறுவனத்தின் நோக்கம் என்று நெஸ்ட்மன் தெரிவித்தார். ஊபர் பிளாக் சேவையுடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு இந்த கட்டணத்தைக் குறைப்பதே நோக்கம் என்கிறார் அவர்.

“பணக்காரர்களுக்கான பொம்மையாக இது இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. நகரத்தில் வாழும் யாருக்கும் கட்டுபடியாகக் கூடிய, ஒருங்கிணைந்த வசதியாக இதை உருவாக்க விரும்புகிறோம்” என்று அவர் கூறினார். “நடப்பதற்கு, வாகனத்தில் செல்ல, சைக்கிளில் செல்ல அல்லது வான்வழியில் செல்ல எல்லோருக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.