வியட்நாமில் இருந்து நாடு திரும்பும் 23 இலங்கையர்கள்.

0 515

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 23 பேர் இன்று நாடு திரும்பவுள்ளனர்.

அந்த நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் 4 மணிக்கு vung tau விமான நிலையத்தில் இருந்து புறப்படவுள்ள பயணிகள் மலேசியாவின் கோலாலம்பூர் ஊடக நாட்டை வந்தடையவுள்ளனர்.

இதற்கமைய இலங்கை நேரப்படி இன்று இரவு 11 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதன்படி கடந்த வருடம் நவம்பர் மாதம், மியான்மரில் இருந்து, 303 இலங்கையர்களுடன் கனடா நோக்கி பயணித்தக கப்பல் ஒன்று, பிலிப்பைன்ஸ் வியட்நாம் எல்லையில் மூழ்கியிருந்தது.

கப்பலில் பயணித்த 303 பேரும் சிங்கப்பூர் கடற்படையின் உதவியுடன் ஜப்பானுக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களில் 151 பேர் ஐக்கிய நாடுகள் சபையின் இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைபின் உதவியுடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஏனைய 152 பேரும் நாட்டுக்கு திரும்புவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் புகலிட கோரிக்கையினையும் முவைத்திருந்தனர்.

அவற்றில் 130 கும் மேற்பட்டவர்களின் புகலிட கோரிக்கையினை பேரவை நிராகரித்துள்ளது.

இந்த நிலையிலேயே புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களில் 23 பேர் சுய விருப்பத்துடன் இன்று நாடு திரும்புகின்றனர்.

ஏனையவர்கள் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவிக்காத நிலையில் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த ஏதிலிகளில் ஒருவர் தம்மை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து தற்கொலை செய்துகொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.