நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்.. அதிர்ச்சியில் உறைந்து போன அமெரிக்கா..
அமெரிக்காவில் 173 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றய தினம் ஓகியோவின் கொலம்பஸ் ஜான் கிளேன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, பீனிக்ஸ் நகருக்கு அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் பெரியதாக சத்தம் வருவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து தான் விமானத்தின் எஞ்ஜின் பகுதியில் தீ பிடித்தமை தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவசர அவசரமாக விமானம் மீண்டும் கொலம்பஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த நிலையில் தரையிறங்கிய விமானத்தின் எஞ்ஜின் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை, தீயணைப்பு படையினர் அணைத்துள்ளனர்.
விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாகவும் விமான நிலையம் தொடர்ந்து இயங்கி வருதாகவும் விமான நிலையம் அறிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மாற்று விமானம் மூலம் பீனிக்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
விமானத்தின் எஞ்ஜின் பகுதியில் பறவை ஒன்று மோதியமையே, தீ விபத்து ஏற்பட காரணம் என ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே வேளை நடுவானில் விமான என்ஜினில் தீ பற்றி எரிவதை தரையிலிருந்து பார்த்தவர்கள் அதனை காணொலி பதிவு செய்துள்ளனர்.
குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..