6லீற்றர் கசிப்பினை பேருந்தில் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது
விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் தர்மபுரம் போலீசாருக்கு அன்று12.11.2024 கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பேருந்தை சோதனையிட்ட பொழுது சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 26 லீற்றர் கசிப்பினை போலீசார் பறி முதல் செய்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை அன்றைய தினம்12.11.2024 கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்