தேரரை மிரட்டி பணம் பறித்த இளைஞர்கள் கைது ; பொலன்னறுவையில் சம்பவம்

0 105

பொலன்னறுவை, திம்புலாகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் தேரர் ஒருவரை மிரட்டி 03 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 மற்றும் 29 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் குறித்த விகாரைக்குச் சென்ற அங்கு பணிபுரிந்த தேரரை தாக்கி நிர்வாணமாக்கி அதனை காணொளிகளாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி தேரரை மிரட்டி சுமார் ஒரு வருட காலமாக பணம் பறித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் , கையடக்கத் தொலைபேசி மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்

Leave A Reply

Your email address will not be published.