ஜப்பானில் பிறப்பு விகத்தை அதிகரிக்க… வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!
ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியா கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் 2025 ஏப்ரல் முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது குறிப்பிடக்கத்தக்கது.
இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் கவர்னர் யூரிகோ கொய்கே தெரிவித்துள்ளார்.