காலி க்ளாடியேட்டர்ஸ் அணியை 5 விக்கட்டுக்களால் வீழ்த்தி மகுடம் சூடிக்கொண்டது – யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ் அணி

0 583

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஒன்பதாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

காலி க்ளாடியேட்டர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ் அணிகளுக்கிடையிலான 20 க்கு 20 போட்டி தொடர் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராயபக்ச சர்வதேச மைதானத்தில் இரவு பகல் ஆட்டமாக இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற காலி க்ளாடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக எம்.டி.குணத்திலக மற்றும் ஹசன் அலி ஆகியோர் களமிறங்கினர்.

யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் ஹசன் அலி 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல அடுத்து அடுத்து களமிறங்கிய வீரர்களும் குறைந்த அளவிலான ஓட்ட்ங்களையே பெற்றுக்கொண்டனர்.

இதற்கமைய 20 ஓட்டங்களின் நிறைவில் காலி க்ளாடியேட்டர்ஸ் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எம்.டி.குணத்திலக 44 பந்துகளுக்கு 56 ஓட்டங்களை அதிகமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பி.டபிள்யு.எச். டி சில்வா அதிகபட்சமாக 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனை அடுத்து 171 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ் அணி 19.4 ஓவ்ர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து 174 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

அணி சார்பாக விஞ்.பெர்னாண்டோ 59 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை அதிகமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் AM பெர்னாண்டோ அதிகமாக 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ் அணியின் அவிஸ்க்க பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.