அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு அபராதம்…
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் விளையாடிவருகின்றது.
இதற்கமைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ,இந்திய அணி தோல்வி கண்டது.
அடுத்து நடைபெற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி எதிர்வரும் 17 ஆம் திகதி டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை சிட்னியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களே பெற்றுக்கொண்டது.
இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீசுவதற்கு இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது.
இதனால் இந்திய அணிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டுவாதாக ஐசிசி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.