நாட்டை புரட்டி போடும் மற்றுமொரு தொற்றுநோய் – 500 பேருக்கு தொற்று உறுதி…
கொரோன வைரஸின் தீவிர தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள இலங்கையை மற்றும் மற்றுமொரு தொற்றுநோய் தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் மனிதர்களை பாதிக்கும் தொற்றுநோய்களில் 9வது இடத்தில் காணப்படும் லீஸ்மேனியாஸிஸ் எனப்படும் நோயே இவ்வாறு பரவிவருகின்றது.
ஈக்கள் அல்லது சேற்றில் வாழும் ஒட்டுண்ணி நோயான இந்த நோய் இதுவரை 500 பேர்வரை தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, தம்புத்தேகம, நொச்சியாகம, நாச்சாத்துவ, தலாவ மற்றும் இபலோகம ஆகிய பகுதிகளிலே குறித்த நோய்த் தொராளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தொற்றுநோய் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று எதிர்வரும் 15ஆம் திகதி அனுராதபுரம் விஜயபுர பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலகில் உள்ள 98 நாடுகளை சேர்ந்தவர்கள் லீஸ்மேனியாஸிஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.