இந்தியாவில் பாரிய தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டம் – தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு.
மலேசியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு ஒன்று, இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சதித்திட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் வசித்து வரும் மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளமை குறித்து இந்திய உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதாக ஊடகங்கள் மூலம் தக்வவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த விடயம் தொடரில் மலேசிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைள் குறித்து இன்று திங்கட்கிழமை மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கடசியினரால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கமைய மலேசியாவை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ரோஹிங்கியா தீவிரவாத அமைப்பினர், இந்தியாவின் அயோத்யா, புத்த கயா (Bodhgaya), ஸ்ரீநகர் மற்றும் பஞ்சாப் மாநிலஇடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெகு விரைவில் இத்தாக்குதல் நடைபெறக் கூடும் என இந்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்ஹ்த்திரிகை நேற்றயதினம் (13) செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்காக நடைபெற்ற ஹவாலா பணப்பரிமாற்றத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு தரகருக்கு தொடர்புள்ளதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய மியன்மாரில் பயிற்சி பெற்ற ஒரு பெண்ணின் தலைமையில் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த செய்தியினை சுட்டி காட்டிய மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், குறித்த விடயம் தொடர்பாக அரசு விசாரணை மேற்கொண்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து மலேசிய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் வலியுறுத்தினார்.
மேலும் மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் எனும் இந்தியாவின் கோரிக்கையை மலேசிய அரசு ஏற்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின், “தீவிரவாத தாக்குதல் விசாரணை தொடர்பில் மலேசிய அரசின் ஒத்துழைப்பை இந்தியா இதுவரை கோரவில்லை.
அவ்வாறு கோரும் பட்சத்தில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என குறிப்பிட்டார்.
அத்துடன் தீவிரவாத தாக்குதல் குறித்து அறிக்கை கிடைத்த பின்னர் அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்யும் எனவும் அவர் பதிலளித்தார்.