இலங்கை கடற்படையை கண்டித்து இந்திய மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் 7வது நாளாக தொடர்கிறது.

0 34

இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

இதற்கமைய இன்றயதினம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தற்போது ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கண்டண ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏழாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தினால் 600 க்கும் மேற்பட்ட பெரிய படகுகள் கடலுக்குச் செல்லாமல் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்ட காரர்கள் இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.