தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை புகழ்ந்து நூல் எழுதிய மாபெரும் சொத்து இன்று மண்ணை விட்டு பிரிந்தது.
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து நூல் எழுதிய மூத்த அறிவிப்பாளர் அப்துல் ஜபார் உடல் நலக்குறைவு காரணத்தினால் காலமானார்.
தமிழகத்தின் சாத்தான்குளத்தைச் சேர்ந்த இவர் தமிழ்நாடு மற்றும் இலங்கை வானொலிகளில் அக்காலத்தில் முன்னணி அறிவிப்பாளராக திகழ்ந்தார்.
பின்னர் அதே வானொலிகள் வாயிலாக கிரிக்கெட் வர்ணனையாளராக உருவெடுத்த ஜபார் தமிழ்நாடு – கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல் முறையாக வர்ணனை செய்தார்.
80களில் பல சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களுக்கு வானொலியில் வர்ணனை செய்துள்ளார்.
இதன்பிறகு ஈஎஸ்பின், நியோ ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டுத் தொலைக்காட்சிகளிலும் தமிழ் வர்ணனை செய்துள்ளார்.
அதுமாத்திரமின்றி அவர் மூன்று நூல்களும் எழுதியுள்ளார்.
இதற்கமைய அழைத்தார் பிரபாகரன் என்கிற நூலில் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அனுபவங்களை எழுதியுள்ளார்.
ஆடியோ நூல்களிலும் பங்களித்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அப்துல் ஜப்பார் இன்று காலமானார்.
அப்துல் ஜப்பாரின் மறைவுக்கு தமிழ் ஓரி செய்தி நிறுவனமான நாமும் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .