ஆபாச படங்கள் தயாரித்து வந்த பிரபல நடிகை கைது – அதிர்ச்சியில் திரை உலகம்..
2016 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பிரபலமானவர் கெஹனா வசிஸ்த்.
இவர் இதற்கு முன்னதாக ஏராளமான ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இதனை அடுத்து ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமாகி இருந்தார்.
இந்த நிலையில் கெஹனா வசிஸ்த் சமீபத்தில் ஆன்லைன் சேனல் ஒன்றினை ஆரம்பித்து அதில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி வந்துள்ளார்.
அந்த படங்களை பார்க்க இரண்டாயிரம் ரூபா செலுத்தி பதிவு செய்து சந்தாதாரர் ஆகவேண்டும்.
இதற்காக மும்பை மலாட் மல்வானி பகுதியில் உள்ள தனி பங்களா ஒன்றில் இளம் பெண்களை வைத்து ஆபாச படங்கள் தயாரித்து வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே சம்பவம் போலீசாரின் காதுக்கு செல்ல போலீசார் அந்த பங்களாவில் சோதனை நடத்தி அங்கிருந்த 2 ஆபாச பட நடிகர்கள், ஒரு பெண் புகைப்பட கலைஞர், ஒரு இளம் பெண் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதனை அடுத்து ஹானாவையும் கைது செய்த போலீசார் விசாரணையில் இதுவரை 87 ஆபாச வீடியோக்களை தயாரித்தம்மை தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஆபாச படம் தயாரித்த நடிகை கைதாகி இருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.