விசாரணைக்காக சென்ற இளைஞர் வீடு திருப்பவில்லை. PTA வில் தடுத்து வைப்பு
வவுனியா கல்மடு கிராம சேவகர் பிரிவை சேர்ந்த, இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான மனோகரன் லிபின்சன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (3) குறித்த இளைஞரின் வீட்டுக்கு Van ஒன்றில் சென்ற இராணுவத்தினர் விசாரணைக்கென இளைஞரை அழைத்து சென்ற நிலையில் இளைஞர் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது.
Mag நிறுவனத்தில், கண்ணிவெடிகள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி அது குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்காகவே அவர் இராணுவத்திரலால் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.