பொது நிகழ்வுகளுக்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு – முடங்கிப்போகும் யாழ் மாநகர்.

0 264

யாழ். மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்றும் வெளியாகும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகளினபடி தொற்று உறுதிப்படுத்தப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களை நாளை திறக்கமுடியும் எனவும் அவர் கூறினார்.

யாழ் மானகரின் தற்போதைய நிலை குறித்து இன்று ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே பணிப்பாளர் கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார்.

அத்துடன் 1வது தொகுதி பீ.சி.ஆர் முடிவுகள் இன்று காலை வெளியானது.

அதில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2வது தொகுதி இன்று மாலை வெளியாகும்.

இதனடிப்படையில் தொற்று இனங்காணப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை முதல் திறக்கலாம்.

மேலும் திருமண மண்டபங்கள், திருமண நிகழ்வுகள். மரண சடங்குகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்தும் நீடிக்கும்.

அதுமாத்திரமின்றி பாடசாலைகள் முன்னர் அறிவிக்கப்பட்டதை போன்று 19ம் திகதியே ஆரம்பமாகும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்டதார்.

Leave A Reply

Your email address will not be published.