இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஆரம்பமாகிறது 14வது ஐ.பி.எல் தொடர்..

0 315

உலகெங்கும் உள்ள கிரிக்கட் இரசிகர்களை அதிகளவில் ஈர்க்கும் இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய 20 க்கு 20 போட்டிகளாக நடைபெறும் இந்த தொடர் நாளை 9ம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்படி தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

அத்துடன் தமது முதல் ஆட்டத்தில் களமிறங்கவுள்ள மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற தொடர்களின்படி இரு அணிகளும் 27 முறை மோதியுள்ளன.

அவற்றில் மும்பை அணி 17 போட்டிகளையும் பெங்களூர் அணி 10 போட்டிகளையும் தம்வசப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.