தனிமையில் வசித்துவரும் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு மிரட்டல்!

0 326

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து பாதிக்கப்பட்ட தாயாரினால் இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ் கோண்டாவில் கிழக்கை சேர்ந்த தேவராசா தேவராணி என்பவரே இவ்வாறு தாம் அச்சுத்தப்பட்டதாக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாரான இவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து தனது கோரிக்கையை பதிவுசெய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டும் கைதிகளுக்காக குரல் கொண்டுத்திருந்தார்.

அன்றைய தினம் இரவு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தம்மை அவரை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பின்னர் தொடர்சியாக வேறு தொலைபேசி இலக்கங்களிலும் இருந்து அச்சுறுத்தும் வகையில் அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதானால் அச்சமடைந்த, தனியாக வசிக்கும் குறித்த தாய் குரலற்றவர்களின் குரல் அமைப்பிடம் விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் குறித்த தாயார் இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் இதற்கு முன்னரும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொண்டால் இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதனால் தனியாக வசிக்கும் எனக்கு பயமாக உள்ளது எனவும் குறித்த தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

அவர்கள் வெளியில் சொல்வதற்கு மிகவும் பயப்பிடுகிறார்கள்.

தமது உறவுகளின் விடுதலைக்காக ஜனநாயக ரீதியில் போராடும் உறவுகளை அச்சுறுத்தும் செயற்பாடுகள் வருத்தமளிப்பதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.