நடிகர் விவேக் காலமானார் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0 281

உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தென்னிந்திய தமிழ் திரையுலகின் நகைச்சுவை பிரபலமான நடிகர் விவேக் காலமானார்.

நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருந்தது.

இதனை அடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் எக்மோ கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

எனினும் இதயத்துடிப்பு மிக குறைவாக இருந்திதனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானாதாக என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விவேக் ஒரு சமூக ஆர்வலராக செயலாற்றி வந்தவர்.

இந்த நிலையில் அவரின் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சினியுலக பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் அவரின் மறைவுக்கு அதிர்ப்தி வெளிட்டுவருவதுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.