வயோதிபரின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொள்ளைக் கும்பல் – யாழில் சோகம்!

0 492

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 72 வயதுடைய சிவராசா என்பவரே உயிரிளந்துள்ளார்.

வயோதிபத் தம்பதியினர் வசிக்கும் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக் கும்பல் அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளது.

இதன் போது கொள்ளையர்களால் வயோதிபரின் கழுத்து நெரிக்கப்பட்டதனாலேயே அவர்; உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.