யாழ் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு தொற்று.

0 254

யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் இருவர் உட்பட யாழ் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார்.

யாழ்; போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்; பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்திலும் 588 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த பரிசோதனை முடிவுகளின் படியே 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி யாழ்; மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர். மற்றைய இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்

அத்துடன் தெல்லிப்பழை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் யாழ்; போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.