பெண்களை பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யும் மற்றுமொரு இணைய நிர்வாகி கைது

0 135

இரத்தினபுரி – கலவானை பகுதியில் இணையதளத்தின் ஊடாக பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துவந்த மற்றுமொரு இணையதளத்தை நடத்திச்சென்ற சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் தொழிலுக்காக இணையதளத்தில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த விசாரணையையடுத்தே இணையதளத்தின் நிர்வாகி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்கிசையில் பதிவான 15 வயது சிறுமியின் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக இதுவரை 46 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.