சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல நட்சத்திர வீரர் ஓய்வு!

0 22

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எல்டன் சிக்கும்பரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டி-20 தொடரில் விளையாடி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இரு அணிகளும் மோதிய கடைசி ஒரு நாள் போட்டி சமனில் முடிந்த நிலையில் சூப்பர் ஓவரில் ஜிம்பாப்வே அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், இரு அணிக்கும் இடையேயான முதல் டி-20 போட்டி ராவல்பிண்டி மைதானத்தில நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வெனற் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில், தற்போதைய பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டன் எல்டன் சிக்கும்பரா அறிவித்துள்ளார்

16 வருடங்களாக ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ள சிக்கும்பரா (34) இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 569 ரன்கள், பந்து வீச்சில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

213 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 4340 ரன்கள், பந்துவீச்சில் 101 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 54 டி-20 போட்டியில் விளையாடி 852 ரன்கள், பந்து வீச்சில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.