கஞ்சா புகைத்தார்! அணியின் தலைவராக இருந்த ஜாம்பவான் மீது பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கஞ்சா புகைத்தார் எனவும், கோகைன் சாப்பிட்டார் எனவும் முன்னாள் வேகபந்து வீச்சாளர் கூறியுள்ளார்.
1992ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் அந்த அணியின் கேப்டனாக அப்போது இருந்தவர் இம்ரான் கான்.
தற்போது பாகிஸ்தானின் பிரதமராக அவர் உள்ளார்.
இந்த நிலையில் இம்ரான் கான் மீது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் கடுமையான குற்றச்சாட்டைவைத்து உள்ளார்.
அவர் கூறுகையில், இம்ரான் கான் கஞ்சாவை உட்கொண்டிருக்கிறார், அவர் லண்டனிலும் என் வீட்டிலும் கூட அதைச் செய்து உள்ளார். 1987 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஒரு கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டபோது, அவர் நன்றாக பந்து வீசவில்லை, அவர் என் வீட்டிற்குச் வந்திருந்தார் மொயின் கான், அப்துல் காதிர், சலீம் மாலிக் ஆகியோருடன் உணவு உட்கொண்டார்.
மேலும் சரஸையும் உட்கொண்டார். மேலும் கோகைன் சாப்பிடுகிறார். லண்டனில், அவர் எதையாவது சாப்பிட்டு விட்டு குறட்டை விட்டு தூங்கி விடுவார் என கூறினார்.
நவாஸின் இந்த பேட்டி பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.