ஐபிஎல் தொடரில் மிரட்டி வரும் தமிழன் நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது!

0 41

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால், உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் விளையாடி வருகிறார்.

இந்த தொடரில் நடராஜனின் பங்களிப்பு ஹைதராபாத்திற்கு பெரிய அளவில் உள்ளது. அதுமட்டுமின்றி கடைசி கட்ட ஓவர்களில் யார்க்கர் துல்லியமாக வீசி எதிரணியை திணறடித்து வருகிறார். நடராஜன் நடப்பு ஐ.பி.எல் சீசினில் 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

இதன் காரணமாக, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது. இதுவே அவருக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் அவருக்கு நேற்று முன் தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதை ஹைதராபாத் அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.