இந்திய வெளிவிவகார செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா நேற்றைய(04) தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டும் கலாசார மண்டபத்தை பார்வையிட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நகரத்திற்கு மீண்டும் வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், 2011 இல் இருந்து 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல முறை இங்கு விஜயம் செய்துள்ளேன் என்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டார்.
கலாசார மத்திய நிலையத்தினை அங்குரார்ப்பணம் செய்வதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்பில் ஈபட்டமை குறிப்பிடத்தக்கது.