அமெரிக்க தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்

0 424

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ளும்படி இரு கட்சியினரும் சொல்லிய பின்பும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது பொறுப்பற்ற செயல் எனச் சொல்லி இருக்கிறார்.

டிரம்ப் நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டால் பல மக்கள் இறக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார் ஜோ பைடன்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமாவும் , சமூக வலைதளத்தில் “இது விளையாட்டு அல்ல” எனச் சொல்லி இருக்கிறார்.

ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார். இது வெற்றிக்குத் தேவையான 270 இடங்களை விட அதிகம்.

இருப்பினும் டிரம்ப், நேற்று (திங்கட்கிழமை) “நான் தேர்தலில் வெற்றி பெற்றேன்” என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

03 நவம்பர் 2020 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, டிரம்ப் தரப்பினர், பல்வேறு வழக்குகளைத் தொடுத்து இருக்கிறார்கள்.

General Services Administration (GSA) என்று அழைக்கப்படும் ஓர் அரசு அமைப்பு, புதிய அதிபர் பொறுப்பேற்றுக் கொள்ளத் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஆனால் டிரம்பால் நியமிக்கப்பட்டவர் தலைமையில் இயங்கும் இந்த அமைப்போ, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதனால், பைடன் தரப்பில் உள்ளவர்களுக்கு அரசின் முக்கியமான விவரங்கள் கிடைக்காமல் போகும். வழக்கமாக, இது போன்ற முக்கிய விவரங்கள், புதிதாக வர இருக்கும் நிர்வாகத்துக்கு வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.