பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள் ; லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ
லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் வேகமாக பரவிவரும் காட்டுதீ காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
காட்டுதீயில் சிக்குண்டு 1500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இந்த பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
இதேவேளை காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதால் தீயணைப்பு படையினர் நிம்மதியடைந்துள்ள போதிலும் ஆபத்து இன்னமும் முடிவிற்கு வரவில்லை.
ஹொலிவூட் ஹில்ஸ் பகுதியில் புதிதாக காட்டுதீ மூண்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் லொஸ் ஏஞ்சல்ஸின் சன்டா மொனிகாவில் வசிக்கும் மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயிரம் கட்டிடங்கள் அனேகமாக வீடுகள் முற்றாகதீக்கிரையாகியுள்ளன.நகரப்பகுதியிலிருந்து 13000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பசுபிக் கரை முதல் பசெடானா வரையில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாங்கள் இன்னமும் ஆபத்தான நிலையிலிருந்து விடுபடவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்துள்ளார்.
பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள்
லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டு தீ ஆபத்து செல்வாய்கிழமையே உருவானது.
ஒரு சக்திவாய்ந்த காற்று புயல் இயற்கை எழில் கொஞ்சும் பசுபிக்கின் பாலிசோட்ஸ் சுற்றுப்புறத்தில் தீப்பிழப்புகளை மூண்டெழச்செய்த போது ஆயிரக்கணக்காணவர்கள் அங்கிருந்து தப்பி விரைவாக வெளியேறவேண்டிய நிலை உருவானது.
கடும் காற்றுகாரணமாக தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் திணறியதால் இரவில் அவசரநிலைமை தீவிரமடைந்தது.அந்த இரவை நகரின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான திகிலூட்டும் இரவு என அதிகாரியொருவர் வர்ணித்துள்ளார்.
அந்த பகுதியை சுற்றிவளைத்திருந்த நான்கு காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக மறுநாள் காலை கலிபோர்னியாவிலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
காட்டுதீ காரணமாக பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.20க்கும் மேற்பட்டவர்களி;ற்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
நான்கு பகுதிகளில் இவ்வளவு ஆக்ரோசமாக பரவிவரும் காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு எங்களிடம் போதிய தீயணைப்பு வீரர்கள் இல்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்தார். நாங்கள் இரண்டு மூன்று காட்டுதீ பரவலிற்குதான் தயாராகயிருந்தோம் நான்கு ஐந்தை எதிர்பார்க்கவில்லை,அன்று மாலை அது ஆறாக மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டார்.
பாலிசேட்ஸ் காட்டுதீயே லொஸ்;ஏஞ்சல்ஸின் நவீன வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒன்று என அதிகாரிகள் கருதுகின்றனர்.இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 50 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் .
தீயினால் அந்த பகுதியின் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன.அதிகரித்த தேவை காரணமாக தீயணைப்பு வீரர்கள் சில இடங்களில் நீரை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
பொதுமக்களை நீரை சேகரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸின் சில பகுதிகளில் காட்டுதீ மிகவேகமாக பரவியதால் அப்பகுதி மக்கள் தாங்கள் கார்களை விட்டுவிட்டு இறங்கி ஓடவேண்டிய நிலைக்கும் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
ஹெலிக்கொப்டரிலிருந்து காட்டுதீயை அணைப்பதற்காக நீர் வீசப்பட்டவேளையே எனக்கு எங்கள் பகுதியில் காட்டுதீ மூண்டுள்ளமை தெரியும்,என அந்த பகுதியை சேர்ந்த ஷெரீஸ் வலஸ் என்ற பெண் தெரிவித்துள்ளார். எனது சகோதரி என்னை அழைத்து அதனை தெரிவித்தார் என்கின்றார் அவர்.
நான் மழை பெய்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் அவர் எனது சகோதரி இல்லை உங்கள் பகுதியில் காட்டு தீ மூண்டுள்ளது அதனை அணைக்க முயல்கின்றனர் நீங்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என தெரிவித்தார் என வலஸ் தெரிவித்துள்ளார்.
நான் வீட்டு கதவை திறந்ததும் காட்டுதீக்கு எதிரே நின்றேன், என அவர் தெரிவித்துள்ளார்.