தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி: ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் இளைஞர்களிடம் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அவசர கோரிக்கையென்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி இந்த நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு இளைஞர்களின் கருத்துக்களும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றம், அமைச்சரவை என்பவற்றின் அதிகாரங்களுடன் இளைஞர்களின் யோசனைகளையும் பெற்றுக் கொள்வது தொடர்பில் நாம் பரிந்துரைகளை வழங்கியுள்ளோம்.
அதற்கு மேலதிகமாக கண்காணிப்பு மற்றும் நிதி பரிபாலன குழுக்களுக்கு 3 இளைஞர்கள் வீதம் உள்வாங்கப்பட வேண்டும்.
இளைஞர்கள் தங்கள் யோசனைகளை சமூக வலைத்தளங்களில் முன்வைப்பதுடன் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்க முடியும்.
அந்த கருத்துக்களை பெற்று மீண்டும் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு கலந்துரையாட முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.