பிரான்ஸ் ஜனாதிபதியாக மெக்ரொன் இரண்டாவது முறையாகவும் தெரிவு!
பிரான்ஸில் இமானுவேல் மெக்ரொன் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
மெக்ரொனின் முதலாம் தவணைப் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து நாட்டின் 12 வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.
பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலமே ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுகிறார்.
ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதன்படி பிரான்சில் கடந்த 10ஆம் திகதி முதல் சுற்று தேர்தலும் நேற்று இரண்டாம் சுற்று தேர்தலும் நடத்தப்பட்டது.
அதில் மெக்ரொன் 58 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.