வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு.
இறுதிக்கபட்ட யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 22ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதீமன்ற நீதிபதி; இலங்கை இராணுவத்தினருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அல்லது அவ்வாறு அவர்களை முன்னிலைப்படுத்த இயலாது போனால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மொனிக்கப்பட்ட 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி ஏராளமானோர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி காணாமல் ஆக்கப்பட்ட பொன்னம்பலம் கந்தசாமி , சின்னத்துரை சசிதரன் மற்றும் உருத்திமூர்த்தி ஆகியோர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்களை அவர்களது மனைவியர் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்தை மனுவை நேற்று முன்தினம் வவுனியா மேல் நிதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதன்போது மனுதாரர்களினால் முன்வைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் குறித்து நீதிமன்றம் திருப்தியடைந்ததாக சட்டத்தரணி எஸ்.இரட்ணவேல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலையே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராணுவத்திடம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.