ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு தமிழ் அரசியல் கைதி சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைப்பு.

0 250

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வளங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் இதனை தெரிவித்ததள்ளார்.

செல்லையா சதீஷ்குமார் என்பவருக்கு விடுதலைப்புலிகளுக்கு உதவினார் எனும் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வளங்கப்பட்டது.

எனினும் அவர் இதுவரையில் சிறையில் இருந்து விடுவிகப்படவில்லை என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர்,

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக செல்லையா சதீஸ்குமார் மேன் முறையீடு செய்திருந்தார்.

அதனால் , மேன் முறையீட்டை மீள பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேன் முறையீட்டை மீள பெறுவதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றில் மேல் முறையீட்டை மீள பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அது தொடர்பிலான ஆவணங்களை நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தாமதங்கள் ஏற்பட்டது.

இதனால், இன்றைய தினம் சனிக்கிழமை வரையில் அவர் தொடர்ந்து சிறைச்சாலையிலையே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.