பொதுமக்கள் அனைவரும் வாயை மூடுமாறு கூறும் அரசு – சீறும் சஜித்..

0 220

அனைவரும் வாயை மூடிக்கொண்டு அமர வேண்டும் என்பதேயை இலங்கை அரசு பொதுமக்களுக்கு சொல்லும் செய்தி என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினர் கொழும்பில் நேற்று போரட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் பொலிஸாரால் பல தடவைகள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட அடக்குமுறை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வாயை மூடி அமருமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கூறியதையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளே குறித்த போரட்டத்தில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.