கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு யாழ் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 259

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு யாழ் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி போராட்டம் நடத்தியமைக்கு எதிராக பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ்ப்பாண நீதிமன்றம், சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

குறித்த வழக்கு கட்டளைக்காக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மாத்திரமே மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

ஏனைய பிரதிவாதிகள் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கட்டளையை வழங்க முடியாதுள்ளதாக நீதவான் ஏ.ஆனந்தராஜா தெரிவித்தார்.

எதிர்வரும் தவணைக்கு வருகை தராத பிரதிவாதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி கே.ரி.தவராசா ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணன்பவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாண மாநகர முன்னாள் மேயர் வி.மணிவண்ணன், மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.