நாடாளுமன்றில் தொடரும் அராஜகம் : மீண்டும் சபையில் கொந்தளித்த அர்ச்சுனா !

0 251

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து இன்று வரையிலும் தீர்வு கிடைக்கவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏழாம் திகதி நாடாளுமன்றில் தனக்கு உரையாட அனுமதி வழங்கப்படாமை குறித்து சபாநாயக்கரிடம் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதாவது, இன்று வரை தனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழக்கப்படவில்லையெனவும் இது குறித்து தனக்கு எவ்வித பதிலும் தற்போது வரை வழங்கப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

யாழில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் தனக்கு சரியான பதிலை தற்போது வரை எதிர்க்கட்சி தலைவர் உட்பட யாரும் வழங்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள போதிலும் எனக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை ஆகவே தனக்கு சரியான பதிலை பெற்றுதருமாறு அவர் சபாநாயகரிடம் கோரியிருந்தார்.

இந்தநிலையில், இதற்கு பதிலளித்த சபாநாயகர் இது தொடர்பில் எதிர்கட்சி தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அத்தோடு இது தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு ஆராயப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இன்றைய தினம் (09) வரையலும் தனக்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என அவர் மூன்றாவது தடவையாக கேட்பதாக சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.