இளைஞர் குழு அட்டகாசம் – நீதவான் வீட்டில் தஞ்சமடைந்த கிராம மக்கள்.

0 312

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு இளைஞர் குழு சென்று குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளினுள் அத்து மீறி நுழைந்து ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில்,குறித்த கிராம மக்கள் தமக்கு பாதுகாப்பு வழங்க கோரி நேற்று இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிலில் முக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து கூறிய ஆயுதங்களுடன் சென்ற இளைஞர் குழு குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் சென்று ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவங்களின் போது பெண் உற்பட இருவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அச்சமடைந்த குறித்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தமக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும்,குறித்த நபர்களை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர். இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதீக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் மக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு கோரி இருந்தனர்.

இந்த நிலையில் அந்த மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டை மேற்கொண்டனர்.

அண்மையில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸார் சிலரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த இளைஞர் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாவட்கட்டு கிராமத்திற்குள் சென்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.