MTV நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு.
சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான MTV நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது.
ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் தலைவருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவதாக MTV நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதனை அடுத்து குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் தலைவருக்கும் எதிரான செய்திகளை வெளியிடுவதனை தடை செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (08) மீண்டும் விசாரணைக்கு எடுத்துத்துக்கொள்ளப்பட்ட போதே MTV தனியார் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை நீதிமன்றம் நீடித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தியாளர் தெரிவித்தார்.