பிரதமர் மஹிந்தவின் செயலுக்கு பாகிஸ்தான் பிரதமர் வரவேற்பு.

0 246

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாவேற்றுள்ளார்.


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதி மறக்கப்பட்டு வந்தது.

கொரோனா தொற்றினால் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் போது கொரோனா தொற்று நீர்வழியாக பரவும் சத்தியம் காணப்படுவதாக தெரிவித்தே இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே நேற்றய நாடாளுமன்ற அமர்வின் போது நீரின் மூலம் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இராஜாங்க அமைச்சரின் கருத்தை சுட்டிக்காட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரதமர், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கும்அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.